கோட்டா சிகிச்சைக்காக தான் சென்றார்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Monday 8 August 2022

கோட்டா சிகிச்சைக்காக தான் சென்றார்: மஹிந்த

 மக்கள் நம்புவது போன்று கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பியோடவில்லையெனவும் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கூறலாம், ஆனால் அவர் சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.


மருத்துவ பரிசோதனைக்காகவே கோட்டாபய சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கின்ற மஹிந்த ராஜபக்ச, அவர் எப்போது திரும்பி வருவார் என்று சொல்ல முடியாது என்றும் கூறுகிறார்.


மே 9 வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்த மஹிந்த, மக்கள் திருப்பித் தாக்க ஆரம்பித்ததன் பின்னணியில் தற்காலிகமாக இராணுவ பாதுகாப்பில் தலைமறைவாகி, பதவி விலகிய பின்னரே மீண்டும் நாடாளுமன்றம் வந்திருந்தமையும் தற்போது, ஊடகங்களை சந்திக்க ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment