ஏப்ரல் மாதம் ஆரம்பமான மக்கள் போராட்டம் இறுதிக் கட்டத்தைத் தாண்டியுள்ள நிலையில் கோட்டா கோ கமயில் கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
நாட்டின் ஆட்சி மற்றும் நிர்வாக முறைமை மாற்றம் வேண்டி ஆரம்பித்த குறித்த போராட்டம், இடையில் மஹிந்த ராஜபக்சவின் சகாக்களால் வன்முறையின் பால் தூண்டப்பட்டிருந்த அதேவேளை கோட்டாபய நாட்டை விட்டும் தப்பியோடியிருந்தார்.
இந்நிலையில், 123வது நாளான இன்று எஞ்சியிருந்த போராளிகளும் கலைந்து செல்லும் நிலையில், நான்கு மாத நிறைவை அரசியலாக்க முனைந்த சரத் பொன்சேகா ஏமாற்றமடைந்துள்ளார். போராட்டத்தை நிறைவு செய்ய வருமாறு முன்னதாக அவர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment