சிங்கப்பூரில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ச, அங்கிருந்து வேறு ஒரு நாட்டுக்கு செல்வதற்கு முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஜனாதிபதியாவதற்காக தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருந்த கோட்டாபய, தற்போது இலங்கைக் கடவுச்சீட்டில் முன் கூட்டிய விசா பெறாமல் பயணிக்கக் கூடிய நாடுகளை அலசி வருவதோடு, தாய்லாந்து நோக்கி நகர்வதற்கு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்குத் திரும்ப முடியாத சூழ்நிலை தொடர்வின், ஆபிரிக்க நாடொன்றில் நீண்ட காலம் தங்கியிருப்பதற்கான சாத்தியக் கூறு இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment