பொதுநலத்துடன் சிந்தித்து செயற்பட்டோம்: நாமல் - sonakar.com

Post Top Ad

Saturday 6 August 2022

பொதுநலத்துடன் சிந்தித்து செயற்பட்டோம்: நாமல்

 



தனது அரசியல் எதிர்காலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பொதுநலத்துடன் சிந்தித்து செயற்பட்டதாக தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.


ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியை மாற்ற வேண்டும் என்ற போதிலும், அதற்கடுத்தது என்னவென்பது தொடர்பில் அவர்களுக்கு தெளிவிருக்கவில்லையெனவும் தெரிவிக்கின்ற நாமல், தனது அரசியல் எதிர்காலத்தை முன்நிறுத்தி யோசித்திருந்தால் டலசுடன் டீல் போட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கிறார்.


எனினும், நாட்டு நலனை முன் நிறுத்தியதால் தான் பொது ஜன பெரமுன ரணிலை ஆதரித்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment