தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு அவரது விசாவை நீடிக்குமாறு சிங்கப்பூர் அரசுக்கு இலங்கை அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஐந்து நாட்களில் சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான விசா முடிவடைகின்ற போதிலும் தற்சமயம் கோட்டாபய நாடு திரும்புவது பாதுகாப்பற்றது என அரசாங்கம் கருதுகிறது.
இந்நிலையிலேயே, அவரது விசாவை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment