சஜித் - ரணில் சமாதானத்துக்கு முயற்சி - sonakar.com

Post Top Ad

Sunday 14 August 2022

சஜித் - ரணில் சமாதானத்துக்கு முயற்சி

 ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று, தனித்துக் கட்சியமைத்த சஜித் பிரேமதாசவுக்கும்,  தேசியப்பட்டியலில் நாடாளுமன்றம் சென்று ஜனாதிபதியாகியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் உடன்பாட்டை உருவாக்க மலிக் விக்ரமசிங்க முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கட்சியின் மூத்த அங்கத்தவரான மலிக், நல்லாட்சி காலத்தில் பொருளதார அடைவுகளைப் பெற்றுக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். தலைமைத்துவ போட்டியின் பின்னணியில் சஜித் தரப்பு பிரிந்திருந்த போதிலும் தற்போது ஜனாதிபதியாகியுள்ளதால் ஐக்கிய தேசியக் கட்சி புத்துணர்ச்சி பெற்றுள்ளது.


இந்நிலையிலேயே, இரு தரப்பு உடன்பாட்டைக் காண்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment