எதிர்கால இலங்கை சமுதாயம் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்குச் செல்வதற்கு ஏதுவாக வெளிநாட்டு மொழிகளை பாடசாலை மட்டத்திலேயே கற்பிப்பதற்கான திட்டத்தை முன்னெடுக்கிறது அரசு.
இப்பின்னணியில், பாடசாலைகளில் ஜப்பான் மொழியைக் கற்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது போலவே சீன மற்றும் கொரிய மொழிகளையும் கற்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பான் மொழியைக் கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் ஜப்பானில் தொழில்வாய்ப்பை பெறுவது இலகுவாக அமையும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல விளக்கமளித்துள்ளதுடன் குறித்த திட்டம் மனுஷ நாநாயக்காரவினால் முன் மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment