கட்சித் தலைவர்களின் முடிவைத் தான் ஏற்பேன்: கோட்டா! - sonakar.com

Post Top Ad

Saturday 9 July 2022

கட்சித் தலைவர்களின் முடிவைத் தான் ஏற்பேன்: கோட்டா!

 


 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இருக்கும் இடம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்க ஊடாக கட்சித் தலைவர்கள் சந்திப்பில் மேற்கொள்ளப்படும் முடிவுக்குத் தாம் கட்டுப்படத் தயார் என தகவல் தெரிவித்துள்ளார் கோட்டா.


மக்கள் போராட்டம் ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றியுள்ள நிலையில், நிர்வாகம் முற்றாக வீழ்ந்துள்ளது. ராஜபக்ச குடும்ப்தினர் தப்பியோடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக விமான நிலையம் மற்றும் துறைமுக பகுதிகளிலும் கண்காணிப்பு இடம்பெற்று வருகிறது.


இந்நிலையில், ரணிலின் கட்சித் தலைவர்கள் சந்திப்பை ஏலவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment