'ஊமை' கோட்டா: வாசுதேவ கடும் விசனம் - sonakar.com

Post Top Ad

Friday 24 June 2022

'ஊமை' கோட்டா: வாசுதேவ கடும் விசனம்

 



நாட்டில் நிலவி வரும் எரிபொருள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ரஷ்ய உதவியைப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசு முன் வராதமை குறித்து ரஷ்ய தூதரகம் விளக்கமளித்துள்ளது. 


இந்நிலையில், தமது கூட்டணிக் கட்சிகள் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தக் கேட்டும் அதனை ஜனாதிபதி புறக்கணிப்பதாகவும் உலகின் ஏனைய நாடுகளுடன் பேசும் அவர் ரஷ்யாவுடன் பேசாமல் ஊமையாக இருப்பது ஏன் எனவும் வாசுதேவ விசனம் வெளியிட்டுள்ளார்.


சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு இலங்கை அரசு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வரும் நிலையில், ஊழல் அரசியல்வாதிகளைக் காப்பாற்றவே சர்வதேச நாணய நிதியத்தின் பணம் உதவப் போகிறது என சர்வதேச அளவில் எதிர் விமர்சனங்களும் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment