வெளிநாட்டு நாணயம் வைத்திருக்க புதிய கட்டுப்பாடு - sonakar.com

Post Top Ad

Saturday 25 June 2022

வெளிநாட்டு நாணயம் வைத்திருக்க புதிய கட்டுப்பாடு

 



தனி நபர் ஒருவர் வங்கியில் வைப்பிடாமல் தம் வசம் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு நாணயத்தின் உச்ச பெறுமதியை 10,000 அமெரிக்க டொலராக குறைத்துள்ளது மத்திய வங்கி.


இதற்கு முன்னர் 15,000 டொலர்  அல்லது அந்த பெறுமதிக்கு நிகரான அளவில் வெளிநாட்டு நாணயம் வைத்திருக்க அனுமதியிருந்தது. எனினும், அதனை தற்போது 10,000 டொலராக குறைத்துள்ளதுடன் அதற்கு மேல் கையிருப்பில் வைத்திருப்பவர்கள் அவற்றை உடனடியாக வங்கியொன்றில் வைப்பிலிட வேண்டும் அல்லது சட்டரீதியான பணமாற்று நிறுவனத்துக்கு விற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மக்களிடம் உள்ள பணத்தை வங்கிகளுக்குப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் 16ம் திகதி முதல் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment