ஜோன்ஸ்டனிடம் மீண்டும் விசாரணை - sonakar.com

Post Top Ad

Friday, 24 June 2022

ஜோன்ஸ்டனிடம் மீண்டும் விசாரணை

 மே 9 வன்முறை தொடர்பில் இன்று மீண்டும் குற்றவியல் புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் அரசியல் சண்டியன் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.


கடந்த ஒன்றரை மாதங்களாக பொதுப் பார்வையிலிருந்து ஒளிந்து வாழும் ஜோன்ஸ்டன், மே 9 வன்முறைக்கு முன்பதாக போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவாளர்கள் ஊடாக சவால் விடுத்துமிருந்தார்.


மஹிந்த ராஜபக்சவை சந்தித்து விட்டு வெளியே வந்த ஆதரவாளர்கள் குழு வன்முறையை ஆரம்பித்திருந்த போதிலும் அதன் முடிவு மோசமான விளைவுகளை உருவாக்கியிருந்ததுடன் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உயிர்ப்பலியிலும் முடிந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment