ரணில் வந்த பின்னர் பிரச்சினைகள் 'உக்கிரம்' : அநுர - sonakar.com

Post Top Ad

Tuesday 21 June 2022

ரணில் வந்த பின்னர் பிரச்சினைகள் 'உக்கிரம்' : அநுர

 ரணிலை பிரதமராகக் கொண்ட புதிய அரசு வந்த பின்னர் நாட்டின் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.


குறைந்த மட்டத்தில் குறுகிய கால திட்டம் ஒன்றையாவது முன் வைக்க அரசு தவறியுள்ளதாகவும் அந்த வகையில் நடைமுறை அமைச்சரவையும் பெயில் ஆகி விட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.


அத்தனை பிரச்சினைகளுக்கும் கோட்டாபய ராஜபக்சவே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அநுர குமார தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment