உத்தேச 21ம் திருத்தச் சட்டத்தினை கொண்டு வருவதில் அரசியலமைப்பு முரண்பாடுகள் இருப்பதனால் நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவது மாத்திரமன்றி மக்கள் ஆணையும் பெறப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இப்பின்னணியில், 21ஐக் கை விட்டு, ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் 22ம் திருத்தச் சட்டத்தினை கொண்டு வருவதற்கு அரசு முயற்சிக்கிறது. நேற்றைய தினம் இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளதாக பந்துல குணவர்தன தகவல் வெளியிட்டுள்ளார்.
இச்சூழ்நிலையில், 19ம் திருத்தச் சட்டத்தோடு ஒன்றிணையும் வகையில் 22ஐ உருவாக்கி, அதனூடாக மக்கள் வாக்கெடுப்பைத் தவிர்த்து, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள கடும் பிரயத்தனம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment