விரைவில் 'கடன்' கேட்கும் மாநாடு: பிரதமர் - sonakar.com

Post Top Ad

Wednesday 22 June 2022

விரைவில் 'கடன்' கேட்கும் மாநாடு: பிரதமர்

 இலங்கைக்கு தொடர்ச்சியாக கடன் வழங்கி வரும் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் தலைமையில் நாட்டை பொருளாதார சிக்கலிலிருந்து மீட்பதற்கான கடன் கேட்கும் மாநாடொன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


இந்தியாவிடமிருந்து நிதியுதவி கிடைக்கப்பெறுகின்ற போதிலும், பெறும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான பொறிமுறையை இன்னும் இலங்கை முடிவு செய்யவில்லையென்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், சர்வதேச நாணய நிதியத்திடம் சரணடைவதே ஒரே, பாதுகாப்பான வழியென நாடாளுமன்றில் வைத்து விளக்கமளித்துள்ளார்.


ஏலவே சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க மற்றும் இந்திய திறைசேரி தரப்புடன் இவ்வாரம் கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் ஜுலை இறுதி அளவிலேயே மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் எனவும் ரணில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment