தமக்கு சேர வேண்டிய 250 மில்லியன் அமெரிக்க டொலர் பிணை முறி மற்றும் அதற்கான வட்டியையும் முதலையும் உடனடியாகத் தருவதற்கு உத்தரவிடுமாறு கோரி அமெரிக்காவில், இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஜுலை 25ம் திகதியுடன் முடிவுக்கு வரும் வகையிலான தமது 5.875வீத பங்கின் பெறுமதியைக் கேட்மே ஹமில்டன் ரிசர்வ் வங்கி இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளது.
இலங்கை, தமது கடன்களை மீளச் செலுத்துவதைத் தவிர்த்துள்ள நிலையில் கடன் கொடுத்தவர்கள் குழுவமைத்து பேச்சுவர்த்தைகளை முன்னெடுக்க தயாராகி வருகின்றமையும், இதற்கிடையில் மேலும் கடன் பெறுவதற்கான மாநாடு நடாத்த அரசு தயாராகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment