நாட்டின் எரிபொருள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ரஷ்யா உதவத்தயாராக இருக்கின்ற போதிலும் இலங்கை அரசு அதற்கான முன்னெடுப்புகளைத் தவிர்த்து வருவதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் சர்ச்சைக்கு உதவுமாறு ரஷ்ய அதிபருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள தூதரகம் இவ்வாறு விளக்கமளித்துள்ளது.
ரஷ்ய விமானத்தை முடக்கியதன் பின்னணியில் இரு நாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், தற்போதைய சூழ்நிலையில் மேற்குலக உதவிகளைப் பெறும் நிமித்தம் ரஷ்யாவை புறந்தள்ளும் சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment