ஹிருனிகாவின் 'தாய்மையை' மதிக்க வேண்டும்: பிரதமர் - sonakar.com

Post Top Ad

Thursday, 23 June 2022

ஹிருனிகாவின் 'தாய்மையை' மதிக்க வேண்டும்: பிரதமர்

 பிரதமர் இல்லத்தின் முன்பாக நேற்றை தினம் ஹிருனிகா பிரேமசந்திர தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் படங்களைத் தவிர்த்து அவரது தாய்மைக்கு மதிப்பளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


நேற்றைய ஆர்ப்பாட்ட சூழ்நிலையில் தனது மார்பகங்கள் தொடர்பில் விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்துள்ள ஹிருனிகா, தான் மூன்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தவர் எனவும் விமர்சகர்களுக்கும் தாய்மார் உண்டு என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.


ஹிருனிகாவின் போராட்டம் அரசியல் ரீதியானது என்பதால் அதனை அரசியல் அடிப்படையிலேயே கையாள வேண்டும் என ரணில் வேண்டிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது:.

No comments:

Post a Comment