தமது கூட்டணி விமல் வீரவன்சவை முற்படுத்தி, அவரது தலைமையின் கீழே இயங்கி வருவதாக தெரிவிக்கும் வாசுதேவ நானாயக்கார, அடுத்த பொதுத் தேர்தலில் விமல் வீரவன்சவை பிரதமர் வேட்பாளராக்க முடியும் என தெரிவிக்கிறார்.
விமல் - கம்மன்பில - வாசு கூட்டணியினர் பசில் ராஜபக்சவுடன் முறுகிக் கொண்டதுடன் பெரமுன அரசு பலவீனமடைவதற்கும் காரணமாக இருந்தனர். இந்நிலையில், தற்போது 21ம் திருத்தச் சட்டத்தை பசில் தரப்பு குழப்ப முனைவதாகவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
தமது தரப்பு திடமாக இருப்பதாகவும், பசில் அணிக்கு போதிய ஆதரவில்லையெனவும் விமல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment