மக்களுக்குப் பயந்து பெரமுன MP தற்கொலை! - sonakar.com

Post Top Ad

Monday 9 May 2022

மக்களுக்குப் பயந்து பெரமுன MP தற்கொலை!

 



நிட்டம்புவயில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பியோடிய நிலையில் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோறள தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


தப்பியோடிய அத்துகோறள ஒளிந்திருந்த கட்டிடத்தை மக்கள் சுற்றி வளைத்திருந்த நிலையில் குறித்த நபர் தனது கைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


முன்னதாக போராளிகள் மீது அவர் சார்ந்த குண்டர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதன் விளைவாக மூவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment