பெரமுன MP சனத் நிஷந்தவின் வீடு எரியூட்டல் - sonakar.com

Post Top Ad

Monday 9 May 2022

பெரமுன MP சனத் நிஷந்தவின் வீடு எரியூட்டல்

 


கொழும்பில் இன்று காலை நிராயுதபாணிகளாக காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதன் சூத்திரதாரிகளுள் ஒருவராகக் கருதப்படும் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷந்தவின் வீடு எரியூட்டப்பட்டுள்ளது.


இன்று காலை கொழும்பில மஹிந்த ராஜபக்சவை பதவி விலக வேண்டாம் எனக் கோரிய ஆதரவாளர்கள் குழு, பெரமுன முக்கியஸ்தர்களால் தலைமை தாங்கப்பட்டிருந்ததுடன் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது.


இந்நிலையில் பல பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment