அனைத்து கட்சிகள் மாநாடு; SJBயும் புறக்கணிப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 21 March 2022

அனைத்து கட்சிகள் மாநாடு; SJBயும் புறக்கணிப்பு

 


நாளை மறுதினம் 23ம் திகதி அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து கட்சிகள் மாநாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்க்க முடிவெடுத்துள்ளது சமகி ஜன பல வேகய.


ஏலவே அரசின் முன்னாள் பங்காளிகளான விமல் - கம்மன்பில - வாசுதேவ கூட்டணி மற்றும் ஜே.வி.பி, தாம் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜனபல வேகயவும் இவ்வாறு அறிவித்துள்ளது.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தாம் தற்போது பலமடைந்து வருவதாக கருதுகின்ற அதேவேளை பெரமுனவினர் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment