நாடு பாரிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்ற நிலையில் கோட்டாபே ராஜபக்ச பதவி விலகப் போவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களில் உண்மையில்லையென மறுத்துள்ளார் ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஒரு போதும் அவர் பதவி விலக மாட்டார் எனவும் ஜனாதிபதி எதிர்த்துப் போராடும் குணம் கொண்டவர் எனவும் கிங்ஸ்லி விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சரவை முற்றாக நம்பிக்கையிழந்திருப்பதுடன் மஹிந்த ராஜபக்சவும் தீவிரமாக செயற்பட மறுக்கும் நிலையில் பெரமுன அரசின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என அவதானிகள் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment