எதிர்க்கட்சி 'அதிகாரத்துக்கு' வரவே வராது: பசில் - sonakar.com

Post Top Ad

Thursday 3 February 2022

எதிர்க்கட்சி 'அதிகாரத்துக்கு' வரவே வராது: பசில்

 


இந்த தலைமுறையில் எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வருவது சாத்தியமேயற்ற விடயம் என்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச.


பிரதமர் பதவியைத் தனக்குத் தருமாறு நிர்ப்பந்தித்து வருவதாக பசில் ராஜபக்ச தொடர்பில் கட்சி மட்டத்திலிருந்து குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த மூன்று வருடங்களுக்குள் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு, அபிவிருத்தி திட்டங்களும் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இப்பின்னணியில் எதிர்க்கட்சியினர் ஆட்சியைப் பிடிப்பது நடக்கவே நடக்காது எனவும் அவர் உறுதியாகத் தெரிவிக்கின்றமையும் ஜனாதிபதியின் அதிகாரத்தை நாடாளுமன்றம் ஊடாக மேலும் இரு வருடங்கள் நீடிப்பதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment