பதவி விலக 'ஆதாரம்' கேட்கும் அருந்திக - sonakar.com

Post Top Ad

Thursday 3 February 2022

பதவி விலக 'ஆதாரம்' கேட்கும் அருந்திக

 


களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அருந்திக்க பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. எனினும், தனக்கும் இதற்கும் தொடர்பிருப்பது நிரூபிக்கப்பட்டாலேயே பதவி விலக முடியும்  என அவர் விளக்கமளித்துள்ளார்.


சம்பவத்தில் அருந்திக்கவின் புதல்வன், சாரதி உட்பட குறித்த அமைச்சின் பொறுப்பிலுள்ள வாகனம் தொடர்புபட்டுள்ள நிலையில் தற்சமயம் புதல்வர் உட்பட்டோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், காயமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மாணவர்களை நலன் விசாரிக்கச் சென்ற அருந்திக்க இவ்வாறு தன்நிலை விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment