சண்முகா நடவடிக்கைக்கு கிண்ணியாவில் கண்டனம்! - sonakar.com

Post Top Ad

Thursday 3 February 2022

சண்முகா நடவடிக்கைக்கு கிண்ணியாவில் கண்டனம்!

 


திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரியில் நேற்றைய தினம் முஸ்லிம் ஆசிரியைக்கு எதிராக கட்டவித்து விடப்பட்ட இனவாத நடவடிக்கைக்கு எதிராக கிண்ணியா கல்வி வலய ஆசிரிய - அதிபர்கள் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.


மாற்று மத கல்சாரத்தை மதி,  மாணவர் மனதில் இனத்துவேசத்தை விதைக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகள் இதன் போது ஏந்தப்பட்டுள்ளன.


இதேவேளை, இன்று சண்முகா கல்லூரி மாணவர்களின் பெற்றோரால் 'மாற்று மத கலாச்சாரத்தை திணிக்காதே' போன்ற வாசகமடங்கிய பதாதைகள் ஏந்தப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஆசிரியை இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment