ஜனாதிபதிக்கு கோபம்; அருந்திக்கவின் பதவிக்கு ஆபத்து - sonakar.com

Post Top Ad

Wednesday, 2 February 2022

ஜனாதிபதிக்கு கோபம்; அருந்திக்கவின் பதவிக்கு ஆபத்து

 


களனி பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் இராஜாங்க அமைச்சர் அருந்திக தொடர்பு பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர் மீது ஜனாதிபதிக்கு 'கோபம்' வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர் பெரமுனவினர்.


இந்நிலையில், அவரது பதவி பறிக்கப்படுவதற்கும் வாய்ப்பிருப்பதாகவும், கௌரவமாக பதவி விலகச் செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பொலிசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் வெளிநாட்டில் பதுங்கியிருந்த சாராய வியாபாரியொருவரை அண்மையில் விமான நிலையத்திலிருந்து காப்பாற்றி வந்ததாகவும் அருந்திக மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment