அமைச்சு வாகனத்தில் சென்று மாணவர்கள் மீது தாக்குதல் - sonakar.com

Post Top Ad

Wednesday 2 February 2022

அமைச்சு வாகனத்தில் சென்று மாணவர்கள் மீது தாக்குதல்

 


களனி பல்கலை மாணவர்கள் சிலர் ராகமயில் வைத்து பிறிதொரு குழுவின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மருத்துவ பீட மாணவர்களே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன் இச்சம்பவத்தில் பிரதேசத்தின் அரசியல்வாதியொருவர் தொடர்பு பட்டுள்ளதாகவும் குறித்த இராஜாங்க அமைச்சரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அரச வாகனமும் பொலிசாரினால் முடக்கப்பட்டிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இரு மரணவர்கள் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலின் பின்னணியில், அதில் ஒரு தரப்புக்கு உதவ சுமார் 15 குண்டர்கள் வெளியிலிருந்து வந்திருப்பதாகவும் அவர்கள் அரசியல் பின்னணியில் இவ்வாறு தாக்குதல் நடாத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment