புத்தளம்: வீடு புகுந்து தாக்குதல்; நகரசபை உறுப்பினர் அடாவடி - sonakar.com

Post Top Ad

Wednesday 2 February 2022

புத்தளம்: வீடு புகுந்து தாக்குதல்; நகரசபை உறுப்பினர் அடாவடி

 


வட்சப் குழுமம் ஒன்றில் புத்தளம் நகரசபை தொடர்பிலான கேள்வி - பதில் கலந்துரையாடலில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் பின்னணியில் புத்தளம் நகர சபை உறுப்பினர் ரணீஸ், பிரதேசத்தின் செயற்பாட்டாளர் ஒருவரை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.


தலையில் காயத்துடன் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணை இடம்பெறுவதாகவும் விளக்கமளிக்கப்படுகிறது.


புத்தளம் நகர சபையின் அல்பா கடைத்தொகுதியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பிலான குறித்த கலந்துரையாடலின் போது அடாவடியில் ஈடுபட்ட நகர சபை உறுப்பினருக்கும் இதில் தொடர்பிருப்பதாகவும் அவரது சகோதரருக்கு அங்கு மூன்று கடைகள் இருக்கின்றன என்ற தகவல் வெளியிடப்பட்டமையுமே தாக்குதலுக்கான காரணம் என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.


அத்துடன் வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ள நவ்ஷாத் பாவா என்பவரை புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-AKD

No comments:

Post a Comment