ஜனாதிபதி $5000 மில்லியன் கடன் எடுத்துள்ளார்: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Sunday 9 January 2022

ஜனாதிபதி $5000 மில்லியன் கடன் எடுத்துள்ளார்: சம்பிக்கதனது ஆட்சிக்காலத்தில் ஒரு சதமேனும் வெளிநாட்டிலிருந்து கடன் பெறவில்லையென அண்மையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து பாரிய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.


இந்நிலையில், ஜனாதிபதி பொய் கூறுவதாகவும் 2020 - 2021 காலப்பகுதியில் மாத்திரம் 5000 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.


அத்துடன் முன்னர் பெற்ற கடனை அடைக்கவே புதிய கடன் பெற்றதாகவும் கூற முடியாது எனவும் அவ்வாறு மீளச் செலுத்தப்பட்ட கடனில் 77 வீதம் மஹிந்த ஆட்சிக்காலத்தில் பெறப்பட்டவையெனவும் சம்பிக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment