500 மில்லியன் கடனை கொடுத்து விட்டோம்: கபரால் - sonakar.com

Post Top Ad

Tuesday 18 January 2022

500 மில்லியன் கடனை கொடுத்து விட்டோம்: கபரால்

 


 

இன்றைய தினம் செலுத்தப்பட வேண்டியிருந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைத் திருப்பிச் செலுத்தி விட்டதாக தெரிவிக்கிறார் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாத் கபரால்.


கடன் வாங்கி கடன் செலுத்தும் கலாச்சாரம் தொடர்வதாக அரசியல் மட்டத்தில் விசனம் வெளியிடப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிடமிருந்து நிதியுதவி பெற்று இக்கடன் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, வருட இறுதிக்குள் மேலம் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு அரசு தற்போது மும்முரமாக முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment