மத்திய நெடுஞ்சாலையால் 'கொளுத்த' வருமானம் - sonakar.com

Post Top Ad

Monday, 17 January 2022

மத்திய நெடுஞ்சாலையால் 'கொளுத்த' வருமானம்

 கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்ட மத்திய நெடுஞ்சாலையின் புதிய பகுதியிலிருந்து முதல் 12 மணி நேரத்தில் 2.8 மில்லியன் ரூபா வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


முதல் நாள் கட்டணம் எதுவும் அறவிடப்படாத நிலையில் ஞாயிறு மதியத்திலிருந்து நள்ளிரவு வரையான 12 மணி நேரத்திலேயே குறித்த தொகை வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குருநாகல் முதல் மீரிகம வரையிலான நெடுஞ்சாலைப் பகுதியை சுமார் 13,583 வாகனங்கள் பயன்படுத்தியதாக புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment