கல்முனை ஸாஹிரா "ஒரு சரித்திரம்" ஆவண தொகுப்பு வெளியீடு - sonakar.com

Post Top Ad

Thursday 23 December 2021

கல்முனை ஸாஹிரா "ஒரு சரித்திரம்" ஆவண தொகுப்பு வெளியீடு


கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் 72வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  ஏ. ஆர் . மன்சூர் பவுண்டேசணின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கட்டுரை, மற்றும் சித்திர போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பணப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், "ஸாஹிரா ஒரு சரித்திரம்" எனும் ஸாஹிராவின் வரலாற்று ஆவண தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு கல்லூரியின் எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் இன்று (23) அறம் பிரதானியும், ஊடகவியலாளருமான எஸ்.டீ. ரோஷன் அஷ்ரபின் தலைமையில் இடம் பெற்றது.


இந்நிகழ்வில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் முன்னாள் அதிபர் சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு கல்முனை ஸாஹிராவின் கடந்தகால வரலாறுகள், கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் முன்னேற்றத்திற்கு பக்கபலமாக நின்ற அரசியல்வாதிகள், ஏ. ஆர் . மன்சூர் பவுண்டேசணின் செயற்பாடுகள் தொடர்பில் சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாடசாலை முதல்வர் எம்.ஐ.எம். ஜாபீர் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக முன்னாள் அதிபர்களான ஏ.எம். இப்ராஹிம், சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா ஆகியோர் கலந்து கொண்டனர்.


ஏ. ஆர் . மன்சூர் பவுண்டேசணின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கட்டுரை, மற்றும் சித்திர போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பணப்பரிசு மற்றும் சான்றிதழ், பதக்கங்கள் என்பன அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் "ஸாஹிரா ஒரு சரித்திரம்" எனும் ஸாஹிராவின் வரலாற்று ஆவண தொகுப்பும் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள்,  ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment