தவறான முடிவின் விளைவே தற்போதைய சூழ்நிலை: சஜித் - sonakar.com

Post Top Ad

Thursday, 23 December 2021

தவறான முடிவின் விளைவே தற்போதைய சூழ்நிலை: சஜித்

 கடந்த தேர்தலில் மக்கள் மேற்கொண்ட தவறான முடிவின் விளைவே தற்போதைய நாட்டின் சூழ்நிலையென்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.


தமது ஆட்சியமைந்திருந்தால் இவ்வாறான ஒரு நிலை வந்திருக்காது எனவும் சமகி ஜன பலவேகய அரசு பொருளாதார நெருக்கடியை கச்சிதமாகக் கையாண்டிருக்கும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, அண்மைய எரிபொருள் விலையுயர்வின் ஊடாக மக்கள் மீது மேலும் சுமையேற்றப்பட்டிருப்பதாகவும் விலையேற்றத்தை இரத்துச் செய்யுமாறும் எதிர்க்கட்சி அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment