பால் தேநீர் விற்பனை இடை நிறுத்தம்! - sonakar.com

Post Top Ad

Friday 31 December 2021

பால் தேநீர் விற்பனை இடை நிறுத்தம்!

 


பால் மா விலைக்கட்டுப்பாடு தளர்த்தலின் பின்னணியில் விலையுயர்வு அதிகரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பால் தேநீர் விற்பனையை இடை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது அகில இலங்கை சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்கம்.


தற்போதைய சூழ்நிலையில் ஒரு கப் பால் தேநீர் 80 ரூபாவுக்கு விற்பனை செய்ய நேரிடும் எனவும் அது வாடிக்கையாளர்களுக்கும் தாங்க முடியாத சுமையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எனினும், விலையுயர்த்தப்பட்டுள்ள போதிலும் பால் மா தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் முறையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment