இலங்கைக்கு கடனை கொடுக்குமாறு சுவாமி அழுத்தம்! - sonakar.com

Post Top Ad

Friday, 31 December 2021

இலங்கைக்கு கடனை கொடுக்குமாறு சுவாமி அழுத்தம்!

 


இலங்கைக்குத் தருவதாக வாக்குறுதியளித்துள்ள 10 பில்லியன் டொலர் கடனை மேலும் தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் என தமது அரசுக்கு அழுத்தம் வழங்க ஆரம்பித்துள்ளார் இந்தியாவின் சர்ச்சைப் பேர்வழியும் ராஜபக்ச குடும்பத்தின் உற்ற நண்பனுமான சுப்பிரமணிய சுவாமி.


இந்தியா கடனை வழங்கத் தவறினால் ரஷ்யாவும் - சீனாவும் இவ்விடயத்தில் முந்திக் கொள்வதன் ஊடாக இந்திய பல்வேறு சர்ச்சைகளை எதிர் நோக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.


அமெரிக்காவின் பேச்சைக் கேட்டே கடன் தருவதை இந்தியா இழுத்தடித்து வருவதாக சுவாமி தெரிவிக்கின்ற அதேவேளை, இலங்கையின் கடன் பெறும் தகுதி வெகுவாக தரமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment