இலங்கைக்கு எதிராக சீன நிறுவனம் உலக அளவில் பிரச்சாரம் - sonakar.com

Post Top Ad

Friday 31 December 2021

இலங்கைக்கு எதிராக சீன நிறுவனம் உலக அளவில் பிரச்சாரம்

 பசளை விவகாரத்தில் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி வரும் சீன நிறுவனம் இலங்கையோடு வர்த்தகம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சர்வதேச மட்டத்தில் பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.


இலங்கையில் வர்த்தகம் செய்ய வேண்டுமானால் மிக அதிகமான தரகு பணம் (கொமிஸ்)  கொடுக்க நேரிடும் எனவும் அதன் பின்னரும் வழங்கப்படும் பொருட்களுக்கான பெறுமதியப் பெறுவது முடியாத காரியமாக உள்ளதாகவும் குறித்த நிறுவனம் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளது.


இந்நிலையில், சீனாவில் உள்ள பல நிறுவனங்களிடம் நேரடியாக இவ்விடயத்தை எடுத்துச் சென்று இலங்கையோடானா வர்த்தக உறவைத் துண்டிக்கச் செய்ய முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment