ரயில் டிக்கட் வழங்குவதை நிறுத்தி 'போராட' முடிவு! - sonakar.com

Post Top Ad

Thursday 23 December 2021

ரயில் டிக்கட் வழங்குவதை நிறுத்தி 'போராட' முடிவு!

 


ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாததன் பின்னணியில் நள்ளிரவு முதல் ரயில் டிக்கட்கள் வழங்குவதை நிறுத்தப் போவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


பாடசாலை சேவைகளின் முக்கியத்துவம் கருதி இதற்கான ஒத்துழைப்பை கடந்த வாரங்களில் வழங்கிய போதிலும் தற்போது இந்த முடிவுக்கு வர நேரிட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதனூடாகவும் தீர்வு கிடைக்கப்பெறாவிடின் 26ம் திகதி முதல் அனைத்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளும் நாடளாவிய ரீதியிலான வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment