தேரரின் கையால் 'பட்டம்' வேண்டாம்; எதிர்ப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 17 December 2021

தேரரின் கையால் 'பட்டம்' வேண்டாம்; எதிர்ப்பு!

 


ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு வெகுவாக உழைத்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர், சில மாதங்களாக அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் அவருக்கு கொழும்பு பல்கலை உபவேந்தர் பதவி வழங்கப்பட்டிருந்தது.


எனினும், ஜனாதிபதியின் இந்நியமனத்துக்கு புத்திஜீவிகள் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மாணவர்கள் கருப்பு பட்டி அணிந்தாவது செல்வதற்கு தீர்மானித்துள்ள அதேவேளை விரிவுரையாளர்கள் புறக்கணிப்பில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment