இலங்கையிடம் $49.7 மில்லியன் கேட்கும் சீன நிறுவனம் - sonakar.com

Post Top Ad

Thursday 9 December 2021

இலங்கையிடம் $49.7 மில்லியன் கேட்கும் சீன நிறுவனம்

 


சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த பசளை, பாதுகாப்பற்றது என்ற பின்னணியில் அதனை இலங்கை ஏற்க மறுத்துள்ளதுடன் 20,000 தொன் பசளை கொண்டு வந்த கப்பல் தற்போது கொழும்பிலிருந்து புறப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றில் தகவல் வெளியிட்டுள்ளார்.


இந்நிலையில், இலங்கை இவ்விவகாரத்தில் அநீதியாக நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கும் சீன நிறுவனமான Qingdao Seawin Biotech Group Co Ltd , இழப்பீடாக 49.7 மில்லியன் டொலர் கோரி சிங்கப்பூரிலும் இலங்கையிலும் சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது.


அபாயகரமான பக்டீரியாக்கள் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் விவசாயிகளின் போராட்டடும் வெடித்திருந்த நிலையில் சீன நிறுவனத்தின் பசளையை இலங்கை ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment