சல்கோட் சந்தேக நபர்களை கைவிட்ட 'சட்டத்தரணிகள்' - sonakar.com

Post Top Ad

Thursday 9 December 2021

சல்கோட் சந்தேக நபர்களை கைவிட்ட 'சட்டத்தரணிகள்'

 


பாகிஸ்தான், சல்கோட் நகரில் இலங்கையரான பிரியந்தவை கொடூரமான முறையில் கொலை செய்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கில், சந்தேக நபர்களுக்காக ஆஜராவதில்லையென்று முடிவெடுத்துள்ள மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம், இன்றைய வழக்கில் ஆஜராவதைத் தவிர்த்திருக்கிறது.


இந்நிலையில் இதுவரை கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.


பிரதேசத்தின் வர்த்தகர்கள் இணைந்து பிரியந்தவுக்காக ஒரு லட்சம் அமெரிக்க டொலர் நிதியினை சேகரித்து அதனை மாதாந்த ஊதியமாக வழங்க நடவடிக்கையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment