அண்மைக்காலமாக இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்ற நிலையில் பாதுகாப்பற்ற சிலிண்டர் விநியோகத்துக்கு அனுமதித்ததன் பின்னணியில் அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் அழகியவண்ண மற்றும் நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் மெத்தனப் போகினாலேயே தரக்குறைவான சிலிண்டர்கள் சந்தையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரரான நாகானந்த கொடித்துவக்கு, இதுவரை அதற்கான முறையான தீர்வு தரப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment