சம்பிக்கவுக்கு எதிராக மஹிந்தானந்த CIDல் முறைப்பாடு - sonakar.com

Post Top Ad

Wednesday 10 November 2021

சம்பிக்கவுக்கு எதிராக மஹிந்தானந்த CIDல் முறைப்பாடு

 


இந்தியாவிலிருந்து பசளை இறக்குமதி செய்ததன் ஊடாக 800 கோடி ரூபா ஊழல் இடம்பெற்றுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்த கருத்துக்கு எதிராக சி.ஐ.டியில் முறையிட்டுள்ளார் அமைச்சர் மஹிந்தானந்த அளுகத்கமகே.


மஹிந்தானந்தவும் சஷீந்ரவுமே இந்த ஊழலுக்குப் பொறுப்பு என அவர் தெரிவித்திருந்தமையை நிராகரித்தே இவ்வாறு முறையிட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், இந்தியாவிலிருந்து சம்பிக்க கூறும் வகையான எதுவும் இறக்குமதி செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கிறார்.


சம்பிக்க தனது குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மஹிந்தானந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment