உகன்டா விமான நிலையத்தை அபகரிக்கவில்லை: சீனா - sonakar.com

Post Top Ad

Tuesday 30 November 2021

உகன்டா விமான நிலையத்தை அபகரிக்கவில்லை: சீனா

 


200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை அடைக்க முடியாத நிலையில் உகன்டாவின் சர்வதேச விமான நிலையத்தை சீனாவிடம் அந்நாட்டு அரசு ஒப்படைக்க நேர்ந்துள்ளதாக வெளியான தகவல்களை சீனா மறுத்துள்ளது.


அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் சீனா வைத்திருக்கும் நல்லுறவைக் கெடுக்கும் வகையில் இட்டுக் கட்டப்பட்டுள்ள வதந்தியென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள நாடுகளுள் இலங்கையும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில் குறித்த விவகாரம் இலங்கையிலும் பிரபலமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment