சிலிண்டர் வெடிப்பு; நாடாளுமன்றில் விசேட கூட்டம் - sonakar.com

Post Top Ad

Tuesday 30 November 2021

சிலிண்டர் வெடிப்பு; நாடாளுமன்றில் விசேட கூட்டம்

 


நாட்டின் பல்வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து நாடாளுமன்றில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைத்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வேண்டியிருந்த நிலையில், அதற்கு கால தாமதம் ஆகும் எனவும் அதற்கு பதிலாக இவ்வாறு விசேட கலந்துரையாடலை நடாத்தி உண்மையை அறியலாம் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.


நுகர்வோர் அதிகார சபை, லிட்ரோ நிறுவனம் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களில் இதில் பங்கேற்கவுள்ளனர்.

No comments:

Post a Comment