உலகில் வங்குரோத்தடைந்துள்ள நாடுகளின் பட்டியலில் இலைங்கை முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பதாக தெரிவிக்கிறார் சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனாவைக் காரணம் காட்டுவது முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என தெரிவிக்கின்ற அவர், ஏற்றுமதி - இறக்குமதி உட்பட அரசின் கொள்கை முரண்பாடுகளால் ஏற்பட்டுள்ள விளைவுகளே இன்றைய நிலையென நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்த போதிலும் 153 வாக்குகளுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்று 2022ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment