பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்ற அழைப்பாணை - sonakar.com

Post Top Ad

Friday, 26 November 2021

பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்ற அழைப்பாணை

 


முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜிதவுக்கு எதிரான விசாரணையின் பின்னணியில் தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


ஈஸ்டர் தாக்குதலைத் தவிர்க்கத் தவறிய குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள நிலையில் பூஜிதவின் நடவடிக்கைகள் தொடர்பில் சாட்சியமளிக்க விக்ரமரத்னவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்டவர்களே தற்போது அதிகாரத்தில் இருப்பதாக குமார வெல்கம அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment