பொலன்நறுவ, வெலிகந்த , சந்துன்பிட்டிய பகுதி வீடொன்றில் கடந்த 13ம் திகதி இடம்பெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் காயமுற்றிருந்த பெண் நேற்றிரவு வைத்தியசாலையில் மரணித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நிக்கவரட்டி பகுதி வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. எனினும், தமது சிலிண்டர்களில் எதுவித பழுதுமில்லையென லிட்ரோ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
நேற்றைய தினம் பன்னிபிட்டிய பகுதியிலும் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment