விலையேற்றத்தை விட உயிரோடிருப்பது முக்கியம்: ஜோன்ஸ்டன் - sonakar.com

Post Top Ad

Wednesday 20 October 2021

விலையேற்றத்தை விட உயிரோடிருப்பது முக்கியம்: ஜோன்ஸ்டன்

 


பொருட்கள் விலையதிகரிப்பு என்பது இரண்டாம் பட்சமான விடயம், அதை விட முக்கியம் மனிதர்கள் உயிரோடிருப்பது எனவும் இன்று ஜனாதிபதியின் 'சிறப்பான' நிர்வாகத்தினூடாகவே கொரோனா சூழ்நிலை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.


கொரோனாவைக் காரணங் காட்டி, பலர் ஊருக்கு செல்ல முடியாதிருப்பதாகவும், விலையேற்றங்களால் மக்களுக்கு முகங்கொடுக்க டுடியாதுள்ளதாகவும் தெரிவித்து வருகின்ற போதிலும் தமக்கு அவ்வாறு எவ்வித பிரச்சினையுமில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


எனினும், அரசின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment