வை. எம். எம். ஏ. பேரவையின் மீலாத் விழா - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 October 2021

வை. எம். எம். ஏ. பேரவையின் மீலாத் விழா

 


அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் ஏற்பாட்டில்  இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தானபனத்தின்  அனுசரணையுடன்   வருடா வருடம் நடத்தும் விசேட மீலாத் தின விழா அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின்  மண்டபத்தில்   வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி தலைமையில் நேற்று இடம்பெற்றது.


சுகாதார விதி முறைகளுக்கு இணங்க குறித்த எண்ணிக்கையிலான  சர்வ மத தலைவர்கள் முக்கிய பிரமுகர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  இதன் நேரடி ஒலிபரப்பு  வானொலியிலும்  ஸ{ம்  சமூக வலைத்தளம் ஊடாகவும் நேரடி ஒலிபரப்பப்பட்டது.


இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் சாபிர் சவாத்,  பொருளாளர் இஹ்சான் ஹமீட், முன்னாள் தூதுவரும் கலாசாரத் தவிசாளர் பௌசான் அன்வர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


இதில் விசேட மீலாத் விசேட கண்காட்சியும். மௌலூத் வைபவமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


- இக்பால் அலி

No comments:

Post a Comment