ஒமானிடமிருந்து 20 வருட சலுகைக் கடன்! - sonakar.com

Post Top Ad

Wednesday 20 October 2021

ஒமானிடமிருந்து 20 வருட சலுகைக் கடன்!

 


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஒரு வருடத்துக்கான எரிபொருளைப் பெறுவதற்கு ஒமானிடமிருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறும் முயற்சி சாதகமாக அமைந்துள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் உதய கம்மன்பில.


5 வருடங்கள் கழித்தே கடனை மீளச் செலுத்த ஆரம்பிக்க வேண்டும் எனவும் 20 வருட காலத்துக்குள் கடனை செலுத்தும் வகையிலேயே இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


தற்சமயம் எரிபொருள் விலையுயர்வை சமாளிக்க முடியாமல் தவிக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 18 ரூபாவையும் டீசலுக்கு 35 ரூபாவையும் இழந்து வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment